அறிவியல் ஆயிரம் : நிற்குமா நிபா வைரஸ்
அறிவியல் ஆயிரம்நிற்குமா 'நிபா' வைரஸ்சமீபத்தில் கேரளாவில் 'நிபா' வைரசால் ஒருவர் பலியானார். பாதிக்கப்பட்ட பறவை (வவ்வால்), விலங்குகளிடம் (பன்றி, ஆடு, பூனை, குதிரை) இருந்து மனிதருக்கு 'நிபா' வைரஸ் பரவுகிறது. அவை கடித்த, எச்சில் பட்ட பழங்களை, மனிதர்கள் பயன்படுத்தும்போது பரவுகிறது. உலகில் மலேசியாவில் 'நிபா' வைரஸ் முதலில் மனிதருக்கு பரவியது. 1999ல் வைரஸ் பாதித்த பன்றிகள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் 2001ல் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிக்கப்பட்டனர். 2018ல் கேரளாவின் கோழிக்கோட்டில் 'நிபா' வைரஸ் பரவியது.