அறிவியல் ஆயிரம் விண்வெளியில் தலைமுடி எப்படி
அறிவியல் ஆயிரம்விண்வெளியில் தலைமுடி எப்படிசர்வதேச விண்வெளி மையத்தில் குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் தங்கள் தலைமுடியை கட்டியிருக்க மாட்டார்கள். இதற்கு அறிவியல் காரணங்கள் உள்ளன. பூமியை போல அங்கு ஈர்ப்பு விசை இல்லாததால் தலைமுடி அனைத்து திசைகளிலும் செல்லும். அதனால் அதை சீவி கட்டுவது சிரமம், அதற்கு அவசியமும் இல்லை. ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு முடி சிக்கலாகவும் வாய்ப்பில்லை. மேலும் விண்வெளியில் பெரும்பாலான நேரம், தலைக்கவசம் அணியும் சூழல் ஏற்படும். அப்போது முடியை கட்டாமல் இருப்பதால், முடிக்கு தேவையான காற்றோட்டம், குளிர்ச்சியும் கிடைக்கும்.