| ADDED : ஜூன் 14, 2024 07:35 PM
அறிவியல் ஆயிரம்விரியும் கதவுகள்மழை, குளிர்காலங்களில் வீடுகளில் வாசல், ஜன்னல்கதவுகள் மூடுவதற்கு சிரமமாக இருப்பதை அனுபவித்திருப்போம். மரம், அதன் பாகங்கள் செல்லுலோசால் ஆனவை. அதன் செல்களில் நீரை உறிஞ்சும் கூழ்மப் பொருள் இருக்கும். இவை பருவநிலைக்கு ஏற்ப நீர், ஈரப்பதத்தை அதிகம் உறிஞ்சி, சிறிதளவு வெளியிடும் திறனைப் பெற்றிருக்கும். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தை உறிஞ்சி கதவு இயல்பாக மூட முடியாத அளவுக்குப் பெரிதாகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் கதவுகளுக்கு புதிதாக பெயின்ட் அடித்தால் இப்பிரச்னையை தடுக்கலாம்.தகவல் சுரங்கம்உலக காற்று தினம்அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்று மிக அவசியம். அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பயன்பாட்டால் காற்று மாசுபடுகிறது. இதனால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். காற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது. * முதியோரை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 60 வயதுக்கு மேலானவர்கள் எண்ணிக்கை 2030ல் 140 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.