| ADDED : பிப் 04, 2024 06:49 PM
அறிவியல் ஆயிரம்இளம் விண்வெளி வீராங்கனைஉலகின் குறைந்த வயதில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்ய விண்வெளி வீராங்கனை வேலன்டினா டிரிஸ்கோவா, 1937ல் பிறந்த இவர் 26 வயதில் 1963 ஜூன் 16ல் வோஸ்டாக் விண்கலத்தில் தனி ஒருவராக விண்வெளிக்கு சென்றார். விண்வெளியில் 48 முறை பூமியை சுற்றி வந்தார். மொத்தம் மூன்று நாள் விண்வெளியில் தங்கியிருந்தார். இன்ஜினியரிங் முடித்த இவர் துவக்கத்தில் ஜவுளித்துறை தொழிற்சாலையில்பணியாற்றினார். பின் ரஷ்ய விமானப்படையில் சேர்ந்து, விண்வெளிதுறையில் நுழைந்தார். இதிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் நுழைந்தார்.தகவல் சுரங்கம்பெரிய விமானம்இருக்கைகள் அடிப்படையில் உலகின் பெரிய பயணிகள்விமானம் 'ஏர்பஸ் ஏ380'. நெதர்லாந்தின் ஏர்பஸ் நிறுவனம் இதை தயாரித்தது. இது முழுநீள 2 அடுக்கு கொண்டது. இதன் முதல் விமானம் 2005 ஏப்.27ல் பயணத்தை துவக்கியது. எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுதன்சா உள்ளிட்ட 16 நிறுவனங்கள் இவ்வகை விமானத்தை பயன்படுத்துகின்றன. 237 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதிகபட்சம் 853 பயணிகளுக்கு அனுமதி இருந்தாலும், 525 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விமானம் 5 லட்சம் கிலோ எடையை தாங்கும்.