உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்அழியும் அமேசான்உலகின் பெரிய மழைக்காடு அமேசான். தென் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 9 நாடுகளில் பரவி உள்ளது. பரப்பளவு 67 லட்சம் சதுர கி.மீ. இது 'பூமியின் நுரையீரல்' என அழைக்கபடுகிறது. உலகின் மொத்த மழைக்காடுகளில் 50 சதவீதம் இங்கு தான் உள்ளது. இந்நிலையில் வறட்சி, காடுகள் அழிப்பு, காட்டுத்தீ, சாலை விரிவாக்கம் போன்ற காரணத்தால் அடுத்த 16 ஆண்டுகளில் அமேசான் காடு, 10 முதல் 47 சதவீதம் அளவுக்கு அழிவை சந்திக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ ஏற்படுவதற்கு வறட்சி, மனிதர்கள் காரணமாக அமைகின்றனர்.தகவல் சுரங்கம்உலக சமூகநீதி தினம்உலகில் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உணவு, பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2007ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. 'சமூக நீதிக்கு சர்வதேச ஒத்துழைப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமூக வளர்ச்சிக்கு 'சமூக நீதி' மிக அவசியம். மக்களிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மையை போக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ