உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்முதல் விண்வெளி பெண்உலகின் முதன்முதலில் குறைந்த வயதில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்யாவின் வேலன்டினா டிரிஸ்கோவா. 1937ல் பிறந்த இவர் 26 வயதில் 1963 ஜூன் 16ல் வோஸ்டாக் விண்கலம் மூலம் தனி ஒருவராக விண்வெளிக்கு சென்றார். தனியாக விண்வெளி சென்ற முதல் பெண் இவர் மட்டுமே. விண்வெளியில் 48 முறை பூமியை சுற்றி வந்தார். மூன்று நாள் தங்கியிருந்தார். இன்ஜினியரிங் முடித்த இவர் துவக்கத்தில் டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பணியாற்றினார். பின் ரஷ்ய விமானப்படையில் சேர்ந்தார். விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் சேர்ந்தார்.தகவல் சுரங்கம்சர்வதேச காடுகள் தினம்காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் சர்வதேச காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'காடுகள், புதுமை: சிறந்த உலகிற்கான புதிய தீர்வுகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள். காடுகளால் நிழல், விறகு, மழை, காற்று உட்பட பல நன்மை கிடைக்கிறது. காடு என்பது மரங்களை மட்டும் குறிப்பதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று.* கவிதை எழுதுதல், வாசிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக கவிதை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ