உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்அலுவலகத்தில் அலைபேசிஅலுவலகத்தில் பணியாளர்கள் தங்களது அலைபேசியை பயன்படுத்த அனுமதிப்பது, அவர்களது வேலைத் திறனை குறைப்பதில்லை. அது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என மெல்போர்ன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஐரோப்பாவை சேர்ந்த மருந்துப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் 1990 முதல் அலைபேசி தடை உள்ளது. அங்கு 40 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது அலைபேசிக்கு தடை விதிப்பது, வேலை திறன், பணி திருப்தி, பணிக்கு வருகை போன்றவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.தகவல் சுரங்கம்இந்தியாவின் நீளமான பாலம்மஹாராஷ்டிராவின் மும்பையில் 'டிரான்ஸ் ஹார்பர் லிங்க்' பாலம் ஜன. 12ல் திறக்கப்பட உள்ளது. இதுதான் இந்தியாவின் நீளமான கடல் பாலம். உலகளவில் 12வது இடத்தில் உள்ளது. தெற்கு மும்பையின் செவ்ரி பகுதியில் தொடங்கி நவி மும்பையின் சிர்லி பகுதியில் முடிகிறது. ஆறுவழிச்சாலையாக அமைக்கப்பட்ட இதன் நீளம் 21.8 கி.மீ. அகலம் 89 அடி. இரு துாண்களுக்கு இடையிலான அதிகபட்ச துாரம் 590 அடி. 2018 ஏப். 24ல் கட்டுமானப்பணி தொடங்கி 2023 டிசம்பரில் நிறைவு பெற்றது. திட்ட மதிப்பீடு ரூ. 17,843 கோடி. இப்பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ