அறிவியல் ஆயிரம் : தேன் பாதுகாப்பின் ரகசியம்
அறிவியல் ஆயிரம்'தேன்' பாதுகாப்பின் ரகசியம்மலரிலிருந்து சேகரிக்கப்படும் தேனில் உள்ள நீரை, தேனீக்கள் சிறகை வேகமாக அசைத்து உலரச் செய்கின்றன. எனவே தேனில் ஈரப்பதம் குறைவு. அதேபோல தேனுக்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. தேனில் நுண்ணுயிரி விழுந்தால் அதன் நீரை முழுதும் தேன் உறிஞ்சி எடுத்து, அதை மடிய செய்து விடும். தேனின் அமிலத்தன்மை அளவு பி.எச். 3 - 4.5. இந்தளவு கொண்ட பொருளில் நுண்ணுயிரிகள் வளர முடியாது. உணவுப் பொருள் கெடுவது, நுண்ணுயிரிகள் வளர்ந்து, சிதைப்பது தான். ஆனால் தேனில் நுண்ணுயிரி வளர உகந்த சூழல் இல்லாததால் தேன் கெடுவதில்லை.