உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தொலைவில் சூரியன்

அறிவியல் ஆயிரம் : தொலைவில் சூரியன்

அறிவியல் ஆயிரம்தொலைவில் சூரியன்பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. பூமி, சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்), தொலைவிலும் (அப்ஹீலியன்) கடக்கும் வானியல் நிகழ்வு நடக்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 365.25 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் (2025ல் ஜூலை 3) பூமி, சூரியனுக்கு தொலைவில் (15.2 கோடி கி.மீ., துாரம்) இருக்கும். இன்றைய தினம் சூரியன், பூமியில் இருந்து பார்க்க வழக்கத்தை விட சற்று சிறியதாக தெரியும். ஜனவரியில் சூரியனுக்கு அருகில் (14.7 கோடி கி.மீ., துாரம்) கடந்து சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ