உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

சர்க்கரையின் மூலப்பொருள்சர்க்கரைக்கான மூலப் பொருள் கரும்பு. அறிவியல் பெயர் 'ஆபிசினேரம்'. உலகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆனால் இது இந்தியாவில் தான் முதலில் பயிரிடப்பட்டது. இந்தியாவில் வேளாண்மை சாகுபடி பயிர்களில் கரும்பு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது. இதில் பல்வேறு ரகங்கள் உள்ளன. இது 6 - 20 அடி உயரம் வளரும். நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொங்கல் பண்டிகையின் சிறப்பு கரும்பு.

தகவல் சுரங்கம்

இன்டர்நெட் பாதுகாப்பு தினம்இன்டர்நெட் (இணையம்) பல வழிகளில் பயன்படுகிறது. சில நிமிடங்கள் கூட இன்டர்நெட்இல்லாமல் இருக்க முடியாதவர்களும் உள்ளனர். இணைய பயன்பாடு கிராமம் வரை விரிவடைந்துள்ளது.அலைபேசி வரவுக்குப்பின் இது பல மடங்கு அதிகரித்துஉள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்றனர். இன்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்தி பிப்.6ல் உலக இன்டர்நெட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் இணையத்தை பாதுகாப்பாகவும், நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை