உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தினமலர் தரம் நிரந்தரம்

தினமலர் தரம் நிரந்தரம்

75 ஆண்டுகளாக தமிழ்மணம் வீசும் 'தினமலர்', தமிழர்களின் கையில் தினமும் பூக்கும் பனிமலர். தினமும் புத்தம் புது மலராக நமது இல்லங்களில் ஜொலிக்கும் தங்கத்தாமரை இந்த 'தினமலர்'. விடிந்தும் விடியாத பொழுதில் காப்பியின் மணமும் தினமலரின் செய்தியும் ஒன்றோடு ஒன்று போட்டுக் கொள்ளும் புதுசுவை. நான் சிறுவனாக இருந்த பொழுதில் இருந்தே தினமலருடன் வளர்ந்தவன். அப்போதே எதிலும் புதுமை, படிப்பதற்கு இனிமை. சண்டேனா 2, வாரமலர், சிறுவர் மலர் என்று பல்வேறு வகையான இலவச இணைப்புகளை எப்பொழுதும் அள்ளித் தந்து கொண்டிருக்கிறது 'தினமலர்'. இதன் தரம் நிரந்தரம். சிறுவர்களும் பெரியவர்களும் மனதில் கொண்டாடும் தினமலராக இன்றுவரை தொடர்கிறது இதன் பயணம். இன்றைய உலகத்தில் பிரின்ட் மீடியாவும் டிஜிட்டல் மீடியாவும் போட்டி போட்டுக் கொள்ளும் நிலையிலும், இதன் வளர்ச்சி புதிய வார்ப்புகளுடன் செயல்பட்டு, அதிலும் முதலிடத்தில் நிற்கிறது என்றால், இது கடக்கும் கடினமான பாதைகள், இதற்கு உரமாக இருக்கிறது என்று நம்புகிறேன். 'தினமலர்' மேலும் பல நூறாண்டுகள் மலரட்டும், தமிழர்களின் தோள்களில் மலர் மாலையாக மணம் வீசட்டும்! உங்கள் புதுமைகள் தொடரட்டும். எம். ரவி தலைவர், சென்னை ஹோட்டல்கள் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி