மேலும் செய்திகள்
நீதியாளர்கள் மத்தியில் தினமலருக்கு மதிப்பு உண்டு
27-Nov-2025
களப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது தினமலர் நாளிதழோடு நல்ல தொடர்பிருந்ததை அதன் பவள விழாவில் நினைத்துப் பரவசமடைகிறேன். கடலூரில் நான் கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றியபோது பல வளர்ச்சிப் பணிகளை முறையாக வெளியிட்டு சாண எரிவாயு, புகையில்லா அடுப்புகள், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி, சமூகக் காடுகள் திட்டம் ஆகியவற்றை மக்களிடம் சென்று சேர்த்ததில் தினமலருக்குப் பெரும் பங்கிருந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் முதன்முறையாக சிறைக் கைதிகளுக்குப் பயிற்சியளித்த நிகழ்வையும், பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சியளித்த விவரத்தையும் விரிவாக வெளியிட்டது தினமலர். நான் காஞ்சியில் மாவட்ட ஆட்சியராக பணியேற்றுபோது அங்கு தினமலருக்காக அலுவலகம் ஏதும் இல்லை. நான் அங்குப் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே அலுவலகம் துவங்கப்பட்டது. காஞ்சி சார்ந்த பல செய்திகள் உரிய முறையில் வெளியிடப்பட்டன. மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளும் விழிப்புணர்வுச் செய்திகளும் சரியான அடர்த்தியில் சென்று சேர்ந்தன. தினமலருடைய நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நான் பங்குகொண்டு மாணவர்களுக்குப் பட்ட மேற்படிப்பு, தேர்வுக்கு தயாராகுதல் போன்றவற்றில் உரையாற்றி இருக்கிறேன். நான் தேர்வு குறித்து எழுதிய 'ஜெயித்துக் காட்டுவோம்' என்கிற நூலை தினமலர் லட்சக்கணக்கில் மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஜெயித்துக் காட்டுவோம் என்கிற அந்த இனிய முயற்சியின் முதல் நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டேன் என்பதை இன்றும் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து தினமலர் சமூகப்பணி ஆற்ற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் (ஓய்வு) முன்னாள் தலைமை செயலர், தமிழக அரசு
27-Nov-2025