மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் கிடைத்தது பட்டா
26-Dec-2025
ரேஷன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு
25-Dec-2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
24-Dec-2025
தார்பாய் மூடி செல்லும் லாரிகள்
22-Dec-2025
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் தினமலர் செய்தி எதிரொலியாக எரியாத மின் விளக்குகளை மாற்றி புதிதாக எல்.இ.டி., விளக்குகள் அமைக்கும் பணி நடக்கிறது.இந்த பஸ் ஸ்டாண்ட் 2014ல் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை,திருச்சி, துாத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்கள், டவுன்பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஹைமாஸ் விளக்குகளை தவிர மற்ற விளக்குகள் எரிவதில்லை. போடி மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சென்டர் மீடியனில் விளக்குகள், பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட் வரை உள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருந்தது. இதனால் இரவில் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை இருந்தது. பஸ் ஸ்டாண்டில் போதிய வெளிச்சம் இல்லாததால், கண்காணிப்பு கேமரா இருந்தாலும் மனித நடமாட்டம், கண்காணிப்பதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் 'இருளில் மூழ்கும் பஸ் ஸ்டாண்ட் ரோடு' என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. எரியாமல் இருந்த விளக்குகள் அகற்றப்பட்டு புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்துதல் சென்டர் மீடியனில் உள்ள மின் விளக்குகள் மாற்றும் பணியை நகராட்சி மேற்கொண்டு வருகிறது.
26-Dec-2025
25-Dec-2025
24-Dec-2025
22-Dec-2025