உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் கழிவு நீர் தேங்கியதால் துர்நாற்றம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவுக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் கழிவுநீர் அகற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தினமலர் செய்தி எதிரொலியாக கழிவுநீர் சுத்தம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். தினமலர்நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை