மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் கிடைத்தது பட்டா
26-Dec-2025
ரேஷன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு
25-Dec-2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
24-Dec-2025
தார்பாய் மூடி செல்லும் லாரிகள்
22-Dec-2025
காரைக்குடி : லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு தினமலர் செய்தி எதிரொலியால் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.இங்கு 6 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் துணை ராணுவம், பட்டாலியன், உள்ளூர் போலீசார் என 300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, குடிநீர் மற்றும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தர ப்படவில்லை என புகார் எழுந்தது.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ஓட்டு எண்ணும் மையத்தை சிவகங்கை எஸ்.பி., டோங்க்ரே பிரவீன் உமேஷ் பார்வையிட்டு, கூடுதலாக சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், தடையின்றி கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தர உத்தரவிட்டார்.
26-Dec-2025
25-Dec-2025
24-Dec-2025
22-Dec-2025