உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி குறுகிய சாலையில் குப்பை அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி குறுகிய சாலையில் குப்பை அகற்றம்

எம்.ஜி.ஆர்., நகர் கோடம்பாக்கம் மண்டலம், 138 வது எம்.ஜி.ஆர்., நகரில் கங்கைகொண்ட சோழன் குறுக்கு தெரு உள்ளது. இங்கு பயன்பாட்டில் இல்லாத கட்டம் ஒன்று உள்ளது. தற்போது, அந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த கட்டத்தில் இருந்த குப்பைகள் அனைத்தும் மூட்டை மூட்டையாக குறுகிய தெருவில் குவிக்கப்பட்டன. இதனால், அத்தெருவில் உள்ள பிற குடியிருப்பு வாசிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்து செல்லுவும், சாலையோரம் நிறுத்தவும் சிரமப்பட்டனர். பல நாட்களாக தெருவில் குவிக்கப்பட்ட குப்பையை அகற்ற அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள், குப்பையை அகற்றியதுடன், வீட்டு உரிமையாளருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை