உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் தினமலர் செய்தி எதிரொலியாக

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்கூரை தயார் தினமலர் செய்தி எதிரொலியாக

வால்பாறை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், புதிதாக பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக இருந்த பயணியர் நிழற்கூரை, மூன்று ஆண்டுகளுக்கு முன் அலுவலக விரிவாக்க பணியின் போது இடிக்கப்பட்டது. இதனால் பயணியர் நிழற்கூரை இல்லாமல், பள்ளி மாணவர்கள், வெளியூர் செல்லும் பயணியர், திறந்தவெளியில் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.அதனால், அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில், 9.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் பயணியர் நிழற்கூரை கட்டும் பணி நடக்கிறது.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''பயணியர் வசதிக்காக நகராட்சி அலுவலகத்தின் முன் நவீன முறையில் பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படும்.இதே போல், சிறுகுன்றா, கவர்க்கல், வேவர்லி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளிலும் புதிதாக பயணியர் நிழற்கூரை கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை