மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
போடி : சில்லமரத்துபட்டி - பெருமாள் கவுண்டன்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை சிறு பாலம் சேதம் அடைந்ததை, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை யொட்டிஒட்டி ரூ.23 லட்சம் மதிப்பில் சாக்கடை சிறு பாலம் கட்டுமானம் நடந்து முடிந்தது.போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற 2 கி.மீ., தூரம் உள்ள சில்லமரத்துப்பட்டிக்கு வர வேண்டும். அல்லது 5 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு செல்ல வேண்டும். பெருமாள் கவுண்டன்பட்டி - சில்லமரத்துபட்டிக்கு ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது டூவீலர் கூட செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் கம்பிகள் நீட்டியவாறு ஆபத்தாக இருந்தது. இரவில் விளக்கு வசதி இல்லாததால் சேதம் அடைந்த பாலம் தெரியாத நிலையில் டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்து ஏற்பட்டன. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர்.சேதம் அடைந்த சாக்கடை சிறு பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சாக்கடை பாலம் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் மாவட்ட ஊராட்சி தலைவர் நிதி ரூ.23 லட்சம் மதிப்பில் சாக்கடை சிறுபாலம் கட்டுமான பணி நடந்து முடிந்தது.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025