உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மாநகராட்சி துவக்கப்பள்ளி தற்காலிக இட மாற்றம்

மாநகராட்சி துவக்கப்பள்ளி தற்காலிக இட மாற்றம்

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு, சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 240 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி பழைய கட்டடத்தில் இயங்கி வந்ததால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி அதனை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி சார்பில், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக நான்கு வகுப்பறையை இடித்து விட்டு, அதில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மீதமுள்ள வகுப்பறையில் மாணவர்கள் நெருக்கடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். வகுப்பறை பற்றாகுறையால் ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து பள்ளியை பார்வையிட்ட அதிகாரிகள், கட்டட பணி முடியும் வரை பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். சாமுண்டிபுரம் இ.பி., ஆபீஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.இடத்தை சுத்தம் செய்தல், வர்ணம் பூசுதல், பிளக் போர்டு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் இரு நாட்களில் பள்ளி தற்காலிக கட்டடத்தில் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ