மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளது. மறைமலை நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்திப்பு வழியாக, மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, இந்த பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் தனியார் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சிக்னல் அமைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.இது குறித்து, கடந்த 24ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், மின் இணைப்பு இல்லாமல் இருந்த சிக்னல் கம்பங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி, சிக்னலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.தொடந்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்தனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025