உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரோலி சிறுவாக்கம் - மோட்டூர் சாலை பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரோலி சிறுவாக்கம் - மோட்டூர் சாலை பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, செம்பரம்பாக்கம்-ஈஞ்சம்பாக்கம்-சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பயணியர், கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம் மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை, குண்டும், குழியுமாக மோசமான நிலையில் சேதமடைந்து இருந்தது. மழைக்காலத்தில், சாலையில் உருவாகியுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்லும் அபாயம் உள்ளது வாகன ஓட்டிகள் புலம்பி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கீழ் 1.40 கோடி ரூபாய் செலவில் சாலை போடும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.முதற்கட்டமாக, சாலை ஓரம் இருக்கும் மண் மற்றும் பள்ளங்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில், தார் சாலை போட்டு வாகனங்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என, சாலை விரிவாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி