தினமலர் செய்தி எதிரொலி - நடைபாதை அமைக்கும் பணி துவக்கம்
சென்னை:தேனாம்பேட்டை மண்டலம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் சில மாதங்களுக்கு முன், புதிதாக நடைபாதை அமைக்க, மாநகராட்சியினர் திட்டமிட்டனர்.அதன்படி, பழைய நடைபாதையை உடைத்து அகற்றும் பணி, துவங்கிய சில நாட்களிலேயே கிடப்பில் போடப்பட்டது.இதனால், சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நடைபாதை அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் மீண்டும் துவங்கி உள்ளனர்.