மேலும் செய்திகள்
திருநகரில் ரோடு சீரமைப்பு
27-Oct-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் மெயின்ரோடு கிரிவல ரோடு பகுதியில் உள்ளது. அந்த ரோடு பல இடங்களில் சேதமடைந்து பள்ளங்களாக இருந்தது. அதில் மழைநீர் தேங்கியது. பள்ளங்கள் இருப்பது தெரியாமல் டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோடு சீரமைக்கப்பட்டது.
27-Oct-2025