/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ரயில்வே கேட் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் சீரமைப்பு பணி: தினமலர் செய்தி எதிரொலி
ரயில்வே கேட் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் சீரமைப்பு பணி: தினமலர் செய்தி எதிரொலி
விழுப்புரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, ரயில்வே கேட் தண்டவாளத்தில் பெயர்ந்திருந்த ஜல்லி கற்கள் சீரமைக்கப்பட்டது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக பண்ருட்டி, பானாம்பட்டு, வாணியம்பாளையம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில், ரயில்வே கேட் தண்டவாளத்தில் சில தினங்களுக்கு முன் ஜல்லி கற்கள் பெயர்த்து போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ரயில்வே கேட் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் ராகவன்பேட்டை ரயில்வே கேட் வழியாக சென்றனர்.