உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மூன்று வயதில் 300 -மரக்கன்றுகள் நடவு; சாதனையாளர் புத்தகத்தில் சிறுவனுக்கு இடம்: தினமலர் செய்தி எதிரொலி

மூன்று வயதில் 300 -மரக்கன்றுகள் நடவு; சாதனையாளர் புத்தகத்தில் சிறுவனுக்கு இடம்: தினமலர் செய்தி எதிரொலி

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இயற்கை ஆர்வலரான இவர், தனது மூன்று வயது மகன் ரக்க்ஷித்ரிஹானுக்கு, இயற்கை மீதான ஆர்வத்தை துாண்டும் விதமாக, அவரை வைத்து மரகன்றுகள் நடவு செய்து வருகிறார். தங்களது தோட்டத்தில், சிறிய குழி எடுத்து கொடுத்தால், மரக்கன்றுகளை சிறுவன் தாமாக எடுத்து வந்து, நடவு செய்து நாள்தோறும் காலை தண்ணீர் ஊற்றி அதனை பராமரித்து வருகிறார். இவரது பணி குறித்து ஏற்னகவே, 'தினமலர்' நாளிதழ் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, முதலில், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எலைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய புத்தகங் களில் சிறுவன் இடம் பிடித்து, பதக்கங்களை பெற்றார். தற்போது, மூன்றாவது முறையாக 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்திலும் அவரது பெயர் இடம் பெற்றதுடன், அதற்கான பதக்கங்களும் வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில், மரங்கள் வெட்டப்பட்டு மொட்டை காடுகளாக மாறி வரும் சூழலில், மூன்று வயது சிறுவன் தனது வீட்டு தோட்டம்; பள்ளிகள் உட்பட பிற இடங்களில், தனது தாயுடன் மரக்கன்று களை நடவு செய்வது உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறுகையில்,''சிறுவன் ரக்க்ஷித் மரக்கன்றுகளை நடவு செய்து அவற்றை பராமரிப்பு செய்வதில் காட்டும் ஆர்வத்தை காணும் போது, எதிர்காலத்தில் வனவளத்தை பெருக்குவதில், இப்பகுதியில் இவரின் பங்கு முதன்மையாக இருக்கும். இதற்கான ஊக்குவிப்பை, அவரின் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வழங்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ