உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பயன்படுத்த கூடுதலாக 2 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டது.ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் உட்புறத்தில் குடிநீர் தொட்டி பெயரளவில் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் கூடுதலாக இரு தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீர் தொய்வின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vivekanandan Mahalingam
ஏப் 04, 2024 11:09

கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் - சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தொட்டி வைத்துள்ள கேவலம் - ஏன் சுத்திகரப்பட்ட தண்ணீர் வழங்க கூடாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை