உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய ரோடு சீரமைப்பு

 குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய ரோடு சீரமைப்பு

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் பதிப் பதற்காக தோண்டப்பட்ட ரோட்டை சீரமைத்தனர். முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளன. இங்கு தெருக்களில் மழை பெய்ததால் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்து இருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் சிமென்ட் கலந்து ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு ரோடுகள் சீரமைக்கப்பட்டு வந்தது. முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே ரோடு சீரமைக்கப்பட்ட நிலையில் மறுநாளே குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு ரோடு சேதமடைந்தது. மழை பெய்தால் ரோடு சேறும் சகதியுமாக மாறும் அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ள சேதமடைந்த ரோட்டில் சிமென்ட் கலந்து ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை