கழிவுநீர் கால்வாய் அமைப்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. திறந்தவெளி கால்வாயாக இருந்ததால், குப்பை சேர்ந்து அடைப்பு ஏற்பட்டது.இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை சீரமைக்க பணிளை துவக்கி, பின் கிடப்பில் போட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது.