உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தனியார் பெயரில் பதிவாகி இருந்த கோவில் நில பட்டா எண்  மாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

தனியார் பெயரில் பதிவாகி இருந்த கோவில் நில பட்டா எண்  மாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பொள்ளாச்சி; ஆனைமலை, சோமந்துறைசித்துார் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண், தனியார் பெயரில் இருந்த நிலையில், விசாரணைக்கு பின், மீண்டும் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலை அருகே சோமந்துறைசித்துார் கிராமத்தில், பாரம்பரியமிக்க மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இந்நிலையில், 'கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆர்.எஸ்.ஆர்.,ல் கோவில் நிலம் என்பது நிரூபணமாகியுள்ளது. கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஹிந்துசமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தனர். இது குறித்து, கடந்த மார்ச் மாதம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பட்டா மாறுதல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது. தனிநபர்கள் பெயரில் இருந்த 48 ஏக்கர் பரப்பிலான கூட்டுப் பட்டா எண், 215, 213 மாற்றம் செய்யப்பட்டது. சோமந்துறைசித்துார் விநாயகர், மாரியம்மன் கோவில் பெயரில் புதிய பட்டா எண் 1109 வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், ''கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஹிந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் நிலத்தை ஏலம் விட வேண்டும். புதிதாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை