மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
வேளச்சேரி: வேளச்சேரி ரயில்வே சாலை, 80 அடி அகலம் கொண்டது. இந்த சாலை, ரயில்வே துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், துாய்மை பணி நடைபெறுவதில்லை.இதனால், இரவு நேரத்தில் இந்த சாலையில் கட்டட கழிவுகள், பிளாஸ்டிக், இறைச்சி, மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. கொட்டுவதை தடுக்கவோ, கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்யவோ நடவடிக்கை எடுக்காததால், கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டன.மேலும், இந்த சாலையை ஒட்டி உள்ள கம்பர் தெருவிலும், பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டன. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், ரயில்வே சாலை மற்றும் கம்பர் தெருவில் குவித்து கொட்டப்பட்ட கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், சாலையும் சுத்தம் செய்யப்பட்டது.மேலும், கழிவுகள் கொட்டாமல் தடுக்க, போலீசார் உதவியை நாட முடிவு செய்துள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025