உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பேசும் நடிகர் கருணாஸ்: பா.ஜ., அரசு சனாதன கொள்கையை வளர்த்து வருகிறது. முருகன் கோவிலில் முன்பு பண்டாரங்கள் தான் மணி அடித்துக் கொண்டிருந்தனர். தற்போது பூணுால் போட்டவர் மணி அடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் சனாதனம்; இதை ஒழிக்க வேண்டும்.டவுட் தனபாலு: சனாதனத்தை பத்தி உதயநிதி தான் ஏட்டிக்கு போட்டியா பேசினார் என்றால், அவங்களை ஆதரிக்கிற கருணாசும் இப்படி பேசுறாரே... சினிமாவுல வேணும்னா இவர் காமெடியனா இருக்கலாம்... ஆனா, தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கு நிஜமான வில்லன் கருணாஸ் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!திண்டுக்கல் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா: 2021 சட்டசபை தேர்தலின் போது ஆத்துார் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டேன். 'இவருக்கு ஓட்டு போட்டால் எதுவும் செய்ய மாட்டார். ஏனென்றால், அவர் இந்த ஊரை சேர்ந்தவரே இல்லை' என அமைச்சர்ஐ.பெரியசாமி கூறினார். அதோடு, அவரிடம் நான் பணம் வாங்கியதாகவும் பொய்யானபிரசாரத்தில் ஈடுபட்டார் பெரியசாமிக்கு வேண்டுமானால் நான் பணம் தருகிறேன்.டவுட் தனபாலு: அமைச்சருக்கே பணம் தர்ற அளவுக்கு வசதி, வாய்ப்புடன் இருக்கீங்களா என்ன...? 'மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பணமில்லாத பா.ம.க., வேட்பாளர்களுக்கு கொஞ்சம் கை கொடுங்க'ன்னு உங்க தலைமை சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' எழுதே!பா.ம.க., தலைவர் அன்புமணி: கடலுார், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் அருகில், கிளி ஜோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக வனத்துறை கைது செய்துள்ளது. 'பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார்' என்று கிளிஜோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான், இந்த பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க., அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. -டவுட் தனபாலு: இதே, 'தமிழகத்துல தி.மு.க., கூட்டணி தான் 40 தொகுதிகள்லயும் ஜெயிக்கும்'னு அந்த கிளி ஜோசியக்காரர் சொல்லியிருந்தார் என்றால், அவருக்கு ராஜ உபச்சாரம் கிடைச்சிருக்கும்... ஆனாலும், தங்கர்பச்சான் எதிர்காலத்தை கணித்த கிளி, தன் எஜமான் எதிர்காலத்தை கணிக்காம போனது ஏன் என்ற, 'டவுட்'தான் எழுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஏப் 11, 2024 23:17

முருகன் கோவிலில் முன்பு பண்டாரங்கள் தான் மணி அடித்துக் கொண்டிருந்தனர் தற்போது பூணுால் போட்டவர் மணி அடித்துக் கொண்டிருக்கிறார் இது தான் சனாதனம் இதை ஒழிக்க வேண்டும் இந்த கருணாவின் கருணையில்லா பேச்சிற்கே கண்டனம் தெரிவிக்க வேண்டும் இவரை கைது செய்து மதவாதத்தை பரப்புகிறார் என்று உள்ளே தள்ள வேண்டும் ஒருவரும் அங்கே மணி அடிக்காததால்தான் பூணுல் போட்டவர்கள் தானாகவே வந்து மணி அடிக்கிறார்கள் இந்த விஞ்ஞான உலகில் மனிதன் என்னன்னவோ செய்கிறான் ஆனால் இந்த கருணையே இல்லாத கருணாவிற்கு இந்த மட்டமான எண்ணம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை இவருக்கு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மவுசே இல்லை நானும் இருக்கிறேன் என்று சொல்லி தாறுமாறாக பேசி உள்ளெ போகப்போகிறார் இதுதான் நாவடக்கம் தேவை என்பது


A.Muralidaran
ஏப் 11, 2024 19:23

கிறித்துவ மதத்தை பின்பற்றும் இவர் ஐயா தேவர் வழி என்பதே கேவலம்


angbu ganesh
ஏப் 11, 2024 09:59

இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன போய்


D.Ambujavalli
ஏப் 11, 2024 07:52

உதயநிதிக்கு வேண்டுமானால் நூறு கோர்ட் ஏறி இறங்க தெம்பும் பணபலமும் இருக்கலாம் நீங்கள் மாட்டினால் அவர் வந்து காப்பாற்றுவாரா என்று யோசித்துப் பேசுங்கள்


முக்கிய வீடியோ