உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளியாக்கியது தான், தி.மு.க., அரசின் சாதனை. 36 மாதங்களாக, எந்த ஒரு புதிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் படு பாதாளத்திற்கு சென்று விடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். தற்போது தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சியுமல்ல; செயலாட்சியுமல்ல. மாறாக, செயலற்ற ஆட்சி; பயனற்ற ஆட்சி.டவுட் தனபாலு: தி.மு.க.,வின் மூன்றாண்டு ஆட்சியில, அவங்க நல்லா பண்ணாங்களோ, இல்லையோ... பொறுப்பான எதிர்க்கட்சியா நீங்க உருப்படியா எதையும் பண்ணலையே... கட்சி தலைமை நாற்காலியை காப்பாத்திக்க நடத்திய போராட்டத்துல பாதியை கூட, ஆளுங்கட்சிக்கு எதிராக நீங்க நடத்தலை என்பதில், 'டவுட்'டே இல்லை!அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: மூன்று கட்ட லோக்சபா தேர்தல் முடிந்த பின், பிரதமர் மோடி தன் சொந்த நண்பர்களையே தாக்கி பேசுகிறார். மோடியின் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண துவங்கி விட்டதை இது தெளிவாக காட்டுகிறது. இதுதான் தேர்தல் முடிவின் உண்மையான போக்கு.டவுட் தனபாலு: தேர்தல் முடிவில் பிரதமர் மோடியின் நாற்காலி ஆட்டம் காணுதோ, இல்லையோ தெரியாது... ஆனா, காங்., தோல்வியடைந்தால், அதுல உங்களுக்கு துளி கூட பங்கில்லை என்றாலும், அதற்கான முழு பழியும் தலைவரான உங்க மீதுதான் வந்து விழும் என்பதில், 'டவுட்'டே இல்லை!ஆவின் நிர்வாகம் அறிக்கை: சில நிறுவனங்கள், தமிழகத்தில் பால் விற்பனையை துவங்குவதாக செய்திகள் வருகின்றன. மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.டவுட் தனபாலு: முதல்ல மார்க்கெட்டை பிடிக்க நினைக்கிற எந்த நிறுவனமும்,விலையை குறைச்சு தான் விற்கும்... அப்பதான், வாடிக்கையாளர்கள் அங்க இடம் மாறுவாங்க... அதனால, அமுலும் விலையை குறைச்சு தான் ஆவினுக்கு ஆப்பு அடிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
மே 11, 2024 08:21

தேர்தல் பத்திரம்


D.Ambujavalli
மே 10, 2024 06:43

யார் போட்டிக்கு வந்தால் என்ன, எங்கள் ஊழல் கமிஷன் எதையும் விட மாட்டோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை