உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: எங்கள் கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்த போது தாய்ப்பாலை குடித்துவிட்டு தி.மு.க.,விற்கு சென்று எதிராக விஷத்தை கக்குகிறார். இது மிகப்பெரும் பாவ செயலாகும். அ.தி.மு.க.,வில் எந்த இடைவெளியும், பிளவும் இல்லை.டவுட் தனபாலு: ரகுபதி போன இடத்துக்கு விசுவாசமா இருக்காரு... அதுல, ஒண்ணும் தப்பில்லையே... நீங்க கூட, ஒரு காலத்துல சசிகலா முதல்வராகணும்னு, ஜெ., சமாதியில மொட்டை போட்டு வேண்டிக்கிட்டதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!'யு டியூபர்' சவுக்கு சங்கர்: என் உயிருக்கு ஆபத்து உள்ளது, கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன். கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கைகளை உடைத்தார்.டவுட் தனபாலு: சாதாரண மக்களை திட்டுனாலே, சரமாரி தர்ம அடி போடுவாங்க... போலீசாரை கேவலமா திட்டினா, உங்களுக்கு பூ எடுத்து போட்டு கும்பிடுவாங்களா என்ன... வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறதுக்கு வாழும் உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: பரம்பரை வரியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி அளித்துள்ளதாக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில், காங்., அந்த உறுதிமொழியை, எங்கேயும் அறிவிக்கவில்லை. காங்., அறிக்கையில், அந்த வாக்குறுதி இடம் பெற்றுள்ள பக்கத்தையும், அதன் பத்தியையும் உ.பி., முதல்வரால் காட்ட முடியுமா?டவுட் தனபாலு: எந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், வரியை ஏத்துவோம், கட்டணத்தை உயர்த்துவோம்னு வெளிப்படையா அறிவிச்சு, நீங்க பார்த்திருக்கீங்களா... எல்லாத்தையும் குறைப்போம்னு தான் வாக்குறுதி தருவாங்க... ஆட்சியில் அமர்ந்த பிறகு தான், வரி, கட்டணங்கள்ல, 'கை' வைப்பாங்க என்பது மூத்த அரசியல் தலைவரான தங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
மே 15, 2024 06:08

நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையிலும், வரிகள், விலையேற்றம் எல்லாம் வெற்றிக்குப்பின்னும்தானே இது எப்படி யோகியால் யூகிக்க முடியவில்லை?


Anantharaman Srinivasan
மே 15, 2024 00:43

சிதம்பரத்துக்கு வயதாகி விட்டது வெயில் வேற ஜாஸ்தியாயிருக்கு பாவம் பேசட்டுமென்று விட்டு விடுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை