உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தற்போது வந்துள்ள புதிய வகை கொரோனாவின் பெயர் கே.பி., - 2. சிங்கப்பூரில் அதிகளவில் பரவியுள்ள இது, 90 சதவீதத்திற்கு மேல் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வைரஸ். இதனால், யாரும் பெரிய அளவில் பதற்றமடைய வேண்டாம். இந்தியாவின் 11 மாநிலங்களில், இந்த வகை கொரோனா வைரசின் பாதிப்பு தென்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.டவுட் தனபாலு: இனி, கொரோனா எந்த வகையில உருமாறி வந்தாலும், நம்ம மக்கள் கலங்க மாட்டாங்க... ஆனா, கொசுக்களால உருவாகும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை கண்டுதான் பயப்படுறாங்க... அதனால நீங்க டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: கபட நாடகம் ஆடுதல், இரட்டை வேடம் போடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல், நம்பி ஓட்டளித்த மக்களுக்கு துரோகம் இழைத்தல் போன்ற செயல்கள், தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை. இதை, தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.டவுட் தனபாலு: ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கிறது, பதவி தந்தவங்களையே கட்சியில இருந்து துாக்கி வீசுறது எல்லாம் உங்க கட்சியிலயும் நடந்திருக்குதே... அதை எல்லாம் தி.மு.க.,வினர் திருப்பி போட்டு தாக்குனா, உங்களால பதில் தர முடியுமா என்ற, 'டவுட்' எழுதே!மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன்: 'யு டியூபர்' இர்பான், முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். அவர், இந்தியாவில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது குறித்து பரிசோதனை செய்யவில்லை. அதனால், எந்த மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்படும். டவுட் தனபாலு: எது, எதைத்தான் யு டியூப்ல போடுறது என்ற விவஸ்தை இல்லாம போயிட்டு இருக்குது... இர்பான் மாதிரி ஆட்களை மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கிட்டு விடாம, கடும் நடவடிக்கை எடுத்தால் தான், யு டியூபர்கள் அட்ராசிட்டிக்கு ஒரு முடிவு வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மே 24, 2024 09:43

திரு வேலுமணி அவர்களுக்கு ஆ தி மு க கட்சியில் தற்போது நடப்பது என்ன? எம் ஜி ஆர் காலத்து ஆட்களுக்கு சரியான மதிப்பும் அங்கிகாரம் இல்லை பின்னர் எப்படி கட்சிக்கு வாக்குகள் எதிர்பார்க்க இயலும் கட்சியில் பணம் உள்ளவர்கள் மட்டும் பதவி கொடுக்கப்படுகிறது அதை நன்கு அனுபவிக்கிறார்கள் ஆட்சி மாறியவுடன் பணத்தை காத்துக்கொள்ள மற்றைய கட்சிக்கு ஓடிவிடுகிறார்கள் இதேபோல் தான் நடந்த பார்லிமென்ட் எலேச்டின் செஅட் கொடுக்கப்பட்டுள்ளது இன்றைய ஆளும் கட்சியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அமைச்சர்கள் மாற்று கட்சியினர் கட்சியின் தலைமை கண்டிப்பான முடிவுகள் எடுக்கப்படவேண்டிய தருணாம் இது கட்சியை காத்துக்கொள்ள அனைவருக்கும் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்


D.Ambujavalli
மே 24, 2024 06:24

கார் டயருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டார் மாஜி


சமீபத்திய செய்தி