உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக உணவுத் துறை அமைச்சர் முனியப்பா: தமிழர் களும், கர்நாடகத்தவரும் சகோதரர்களாக உள்ளனர். அதனால்,காவிரி பிரச்னையையும் அந்தக் கோணத்திலேயே அணுகுவர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சிக்கல் எதுவும் இன்றி தீர்க்கப்படும்.டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, உங்க கட்சியின் துணை முதல்வர்சிவகுமார், 'மேகதாது அணையை கட்டியே தீருவோம்'னு கங்கணம் கட்டிட்டு இருக்காரே... மூத்த தலைவர் என்ற முறையில், அவருக்கு அறிவுரை சொன்னீங்க என்றால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: இம்முறை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.,வெற்றி பெறும். நாடு முழுதும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். தென் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பின் வடக்கு, தெற்கு என்ற வாதம் இருக்காது. டவுட் தனபாலு: பக்கத்து மாநிலங்கள்ல எல்லாம் பா.ஜ., அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கும்னு சொல்றவர், தமிழகத்துலயும் அப்படி ஜெயிக்கும்னு அடித்து சொல்ல மாட்டேங்கிறாரே... தன் கட்சியினர் உழைப்பு மீது நம்பிக்கை இல்லையா அல்லது தி.மு.க., கூட்டணி மீது அபார நம்பிக்கையா என்ற, 'டவுட்' வருதே!தென்சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை: ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஹிந்துத்துவா தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், ராமர் கோவில் சென்று வழிபட்டு, '100 ஆண்டு ராமர் கோவில் கனவு நனவாகியுள்ளது' என கூறியிருப்பார். நாங்கள் ஜெயலலிதாவை இந்தியா முழுதும் எடுத்து செல்ல விரும்புகிறோம். அவரை அ.தி.மு.க.,வினர் குறுகியவட்டத்தில் வைக்க முயற்சி செய்கின்றனர்.டவுட் தனபாலு: இப்ப ஜெ., மீது பாசம் பொங்க பேசுறீங்களே... அவங்க, சொத்து குவிப்பு வழக்குல, கர்நாடகா சிறையில அடைக்கப்பட்டப்ப, அவங்க ஹிந்துத்வா தலைவர்என்பது தங்களுக்கும், தங்களது கட்சி தலைமைக்கும் தெரியாதா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tiruchanur
மே 29, 2024 19:21

வர்ற மழை தண்ணியை கடலுக்கு விட்டுட்டு "கர்நாடகா தண்ணி விடலை"ன்னு புலம்பி என்ன பிரயோஜனம்? மழை வரும்போது நீரை சேமித்துவைக்க கல்லணை, வீராணம் இருன்னு சோழர் காலத்துலே திட்டமிட்டு நல்ல பண்ணியிருந்தாங்க. சாத்தனுர் அணைக்கு பிறகு எந்த அணையையும் கட்டாம திராவிடியா காட்சிகள் கொள்ளை அடிச்சாச்சு. இதே சமயத்தில் தென் பாரத்துலேயே பெரிய்ய்ய அணையான ஆலமட்டி அணையை கிருஷ்ணா நதிக்கு நடுவில கட்டி முடிச்சிடுச்சு கர்நாடகா. மேட்டூர் அணை மாதிரி 4 மடங்கு பெரியது அவங்க கிட்ட போயி கத்துக்கிடணும் the vidiyal கட்சிகள்


N DHANDAPANI
மே 29, 2024 13:38

இன்றைக்கு ஏன் டவுட் தனபாலு தடுமாறி இருக்கிறார் தெரியவில்லை அண்ணாமலையை பற்றி கூறும்பொழுது மூன்று வருடம் தலைவராக இருப்பவர் கிட்டத்தட்ட 60 வருடங்கள் வேரூன்றி இருக்கக்கூடிய திராவிட கட்சிகளை அவ்வளவு எளிதாக அசைத்து விட முடியுமா என்பதை கருத்தில் கொள்ளாமல் இன்று தனபால் பேசியிருக்கிறார். அதே போல தமிழிசை ஜெ பத்தி சொன்ன பொழுது, ஜெயலலிதா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டதும் அதனுடைய காரணத்தை அறியாமல் வழி மாறி செல்கின்ற அமைப்பு பாஜக என்று சொல்ல வருகிறாரா?


D.Ambujavalli
மே 29, 2024 06:14

சகோதரர்கள் என்றாலும் 'பங்காளி காய்ச்சல்' இருக்குமே சொத்து என்று வந்தால் எல்லாரும் மாறிவிடுவார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை