உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., தலைமை நிலைய செயலரும், நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன்: நடிகர் ரஜினியை நான் சந்தித்து பேசியதில் எந்த அரசியலும் கிடையாது. மரியாதை நிமித்தமான முறையில் சந்தித்து பேசினேன். நடிகர் சங்க கட்டுமான பணிகள் பாதியில் நின்றிருந்தது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு பணிகள், கட்டுமான பணிகள் ஒரு வாரமாக நடந்து வருவதை ரஜினிக்கு தெரியப்படுத்தியதும், அவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டட பணிகள் முடிந்து, ஜனவரியில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.டவுட் தனபாலு: நடத்துங்க... ஆனாலும், தமிழ் திரையுலகில் அரை நுாற்றாண்டாக சூப்பர் ஸ்டாராக இன்று வரை திகழும் நடிகர் ரஜினி மட்டற்ற மகிழ்ச்சியுடன், கொஞ்சம் மனசும் வைத்தால், நடிகர் சங்க கட்டட பணிகள் ஆறு மாசம் என்ன, மூணே மாசத்துல முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் சக்கரவர்த்தி: 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, தமிழக பா.ஜ.,வுக்கு நான்கு மடங்கு ஓட்டு சதவீதம் கூடியுள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்காக மேலிட தலைவர்கள் முயற்சி எடுத்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி, பா.ஜ., உடன் கூட்டணி சேரவில்லை. டவுட் தனபாலு: மத்தியில், சர்வ வல்லமையுடன் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ., கூட்டணியையே துணிச்சலாக உதறி தள்ளிய பழனிசாமி, மாநில ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பணிந்திருப்பார்னு சொல்றது நம்பும்படியா இல்லையே... உங்க தோல்விக்கு அடுத்தவங்க மீது பழிபோடுவது முறையா என்ற, 'டவுட்' தான் வருது!பா.ம.க., தலைவர் அன்புமணி: லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு வெற்றி கிடைக்காதது வருத்தம் தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைய எதுவுமில்லை. ஆளும் தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2019 தேர்தலை விட 6 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2021 சட்டசபை தேர்தலை விட, 13 சதவீதம் குறைந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து, ஆட்சி அமைப்பது தான் எங்கள் ஒரே இலக்கு. டவுட் தனபாலு: 2011ல் இருந்தே பா.ம.க., ஆட்சின்னு சொல்லிட்டு தான் இருக்கீங்க... எதுவும் நடந்த மாதிரி தெரியலை... தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினால்,'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூன் 09, 2024 12:04

பாமக இனி கழுதை தேய்ந்நு கட்டெறும்பான கதைதான். ஓவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சி முதுகில் சவாரி. எப்படி கட்சி தேறும்?.


D.Ambujavalli
ஜூன் 09, 2024 06:50

கோடநாடு, பொதுப்பணித்துறை ஊழல் என்று ஒவ்வொரு நிமிஷமும் மனப்பதற்றத்துடன் உள்ள நிலையில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொள்ளலாமா ? தன்பாதுகாப்புக்காகக் கட்சியைக்கூடக் கலைக்க மாட்டாரா ?


Bharathi
ஜூன் 09, 2024 05:29

என்ன அழுத்தமோ தெரியல, இப்பவெல்லாம் தினமலர் தீயமுகாவுக்கு நாசூக்கா ஜால்ரா அடிக்குது


Bharathi
ஜூன் 09, 2024 05:27

எடப்பாடிக்கு டெல்லிக்கு MPக்களை அனுப்பி அவர்கள் தனக்கு மேலே உயர்வது விருப்பம் இல்லை. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போமென்ற நம்பிக்கையும் ல்லை. ஸ்டாலினை பகைத்துக்கொண்டு சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலெல்லாம் மாட்டிக்கொள்ள கூடாது. அதற்கு ஸ்டாலினை பகைச்சிக்க கூடாது, ஒரு கட்சியோட பாதுகாப்பு தேவை. இது தான் எட்டப்பாடியின் திட்டம். ஸ்டாலினுக்கு பயப்படலைனா ஏன் இந்த மூன்று ஒரு பெரிய போராட்டமோ எதிர்ப்போ தெரிவிக்க வில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை