உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி: அ.தி.மு.க.,வை விமர்சிக்க, பா.ஜ.,வுக்கோ, அண்ணாமலைக்கோ அருகதை கிடையாது. தி.மு.க.,வுக்கு எதிராக, 1972ல், எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க., உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல், தி.மு.க., - அ.தி.மு.க., இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றன. இது கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. அவர் ஒரு அரசியல் அறிவிலி. டவுட் தனபாலு: எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க., உருவாக்கப்பட்டது என்பதும், அதை ஆயிரம் யானைகள் பலம் வாய்ந்த இயக்கமா ஜெ., மாற்றியதும் வரலாற்று உண்மைகள்... ஆனால், அப்படிப்பட்ட கட்சி தற்போது இருக்கும் சூழலை பார்த்தால், 2026ல் ஆட்சியை பிடிக்கும் என்பதை அவங்க ஆன்மாக்கள் கூட நம்புமா என்பது, 'டவுட்'தான்!அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலர் ராஜ்சத்யன்: மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை பெற்று, மாநில உரிமைகளை நிலைநாட்டி நேர்மறை அரசியல் செய்ய வக்கற்ற அண்ணாமலை, தன் மீது அரசியல் வெளிச்சம் எப்படியாவது பாய்ந்து விடாதா என்ற அற்ப எண்ணத்தில், அ.தி.மு.க.,வை தொடர்ந்து சீண்டி வருகிறார்-. டவுட் தனபாலு: அண்ணாமலை எப்பவுமே, 'லைம் லைட்'ல தான் இருக்காரு... தேசிய கட்சியின் மாநில தலைவரான அவருக்கு பதிலடி தருவதன் வாயிலாக, நீங்க தான் அரசியல் வெளிச்சம் தேடிக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்: மத்தியில் உள்ள மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் அது கவிழும். எப்போது வேண்டுமானாலும் லோக்சபா தேர்தல் நடக்கலாம் என்பதால், நம் கட்சி தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.டவுட் தனபாலு: தேர்தல் மறுபடியும் வரும்னு மனப்பால் குடிக்காதீங்க... தப்பி தவறி மறுபடியும் தேர்தல் வந்து, 'மோடிக்கு பெரும்பான்மை தராம தப்பு பண்ணிட்டோம்'னு வாக்காளர்கள் நினைச்சுட்டா, 'இண்டியா' கூட்டணி இருக்கிற இடம் தெரியாம போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Dharmavaan
ஜூலை 11, 2024 08:04

ஜாதிமத ரீதியான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட வேண்டும்.அதுவே சமத்துவம்


Ramani Venkatraman
ஜூலை 09, 2024 11:36

பேச்சுக்கு இரு துருவம் தான். அண்ணாமலை எதிர்ப்பில் இரண்டும் ஒரே துருவம் தான்...அண்ணாமலையை எதிர்த்தால் தமக்கு ஓட்டு வங்கி உயரும் என்ற எண்ணம்.


D.Ambujavalli
ஜூலை 08, 2024 16:33

நாங்கள் இரு துருவம் என்று சொல்லிக்கொள்வோமே தவிர, வழக்குகளை 'அமுக்குவது', contract களை ஒதுக்கிக்கொள்வது என்று ஒண்ணுமண்ணாதான் இருக்கோம் . அதனால் அவர்கள் என்ன விமர்சித்தாலும் பொருட்படுத்த மாட்டோம்


Dharmavaan
ஜூலை 08, 2024 07:17

அரசை வைத்துக்கொண்டு மத்திய அரசிடமிருந்து உதவி பெற கையாலாகாதது அண்ணாமலை உதவி செய்யவில்லை என்கிறது மக்கள் அண்ணாமையையா ஜெயிக்க வைத்தார்கள், அவர் உதவியை நீ ஸ்டிக்கர் ஒட்டி நல்ல பேர் வாங்க சதி


M Ramachandran
ஜூலை 08, 2024 03:04

அப்போ தி மு க்கா அமைப்பு செயலாளர் RS. பாரதி விமர்சித்தால் சும்மா இருப்பீர்கள்


புதிய வீடியோ