உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த எட்டரை ஆண்டுகளாக அதாவது, 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல், அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. கடந்த, 18 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலனையும் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.டவுட் தனபாலு: அது சரி... இதே, 'பஞ்சாயத்து' அரசு ஊழியர்களுக்கும் வந்துடக் கூடாதுன்னு தான், அவங்களது ஓய்வு வயததை 62 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிடுகிறதோ என்ற, 'டவுட்'தான் வருது!லோக்சபா பா.ஜ., - எம்.பி.,அனுராக் தாக்குர்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்குபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், அங்கு உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வலியுறுத்தினார். ராகுலும்,வங்கதேச அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்; ஆனால், ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்துஎதுவும் கூறவில்லை. டவுட் தனபாலு: ராகுல், இங்க இருக்கும் ஹிந்துக்களை பற்றியே கவலைப்பட மாட்டார்... இதுல, எல்லை தாண்டி பக்கத்துநாட்டுல இருக்கிற ஹிந்துக்களை பற்றி அவர் கவலைப்படணும்னு நீங்க எதிர்பார்ப்பதுஓவர் பேராசை என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக சபாநாயகர் அப்பாவு: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி மோதல்கள் எங்கும் நடக்கவில்லை. பள்ளி மாணவர்களிடம் சிறு தள்ளுமுள்ளு, பிரச்னைகள் வருவது இயல்பு. பள்ளிகளில் நடக்கும் மாணவர் பிரச்னைகளில், போலீஸ் தலையிடக் கூடாது. அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர்களே, அந்த மாணவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவையானால் மாணவர்களை, 'சஸ்பெண்ட்' செய்யலாம்; அதற்கான உரிமை தலைமை ஆசிரியருக்குஉள்ளது. டவுட் தனபாலு: அது சரி... மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்தாலும், அவரது ஜாதி பின்புலத்தையும் ஆராய்ந்து பார்த்து, குற்றம் காணும் கோஷ்டிகள் நிறைய இருக்குதே...அதனால, உங்களது இந்த யோசனை எடுபடுவது, 'டவுட்'தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஆக 11, 2024 17:04

நைசாக பஞ்சாயத்து பொறுப்பை ஆசிரியர்கள் தலையில் கட்டி, பிள்ளைகளின் மோதலால் சஸ்பெண்ட் செய்தால், பெற்றவர்களின் விரோதத்துக்கும் ஆளாக வேண்டும் பள்ளியில் மாணவர்களிடையே இது சிறிய அளவில் நடந்திருந்தால் ஆசிரியர் சமாளிக்கலாம் ஆனால் ஆயுதம் ஏந்தும் அளவு வந்து ஆசிரியரையே தாக்கும் 'மினி ரவுடிகள்' விவகாரத்தில் ஆசிரியர் உயிர் போனாலும் போலீசை நாடக்கூடாது நன்றாக இருக்கிறதே


Sathyanarayanan Sathyasekaren
ஆக 11, 2024 03:17

கான் ஸ்கேம் காங்கிரஸ்க்கு இருக்கும் ஹிந்துக்களும், வோட்டை போடும் ஹிந்துக்களுக்கு சிறுது கூட மானம் ரோஷம் கிடையாது.


HoneyBee
ஆக 11, 2024 10:21

இந்துக்களை அடிமைகள் என்று சொல்லுங்க அதுதான் உண்மை


Sridhar
ஆக 11, 2024 11:47

திருட்டு திமுகவுக்கே ஒட்டு போடுறாங்க, அப்புறம் காங்கிரஸுக்கு போடமாட்டாங்களா?


புதிய வீடியோ