உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: நவ. 6

‘டவுட்’ தனபாலு: நவ. 6

தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்ல சாமி: முதல்வர் விஜயின் புதுக்கோட்டை பயணம், பாமா விஜயம் என்ற திரைப்படத்தில் வரும், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்ற பாடலை நினைவூட்டுகிறது. சென்னையில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக விழாவை நடத்தி இருக்கலாம். தமிழகம், 13 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளபோது தனி விமானம், ‘ரோடு ஷோ’ மற்றும் இரும்பு தடுப்புகள் என ஆடம்பர செலவுகள் தேவையில்லை. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... முடிஞ்ச நலத்திட்டங்களை சென்னையில் இருந்தே துவங்கி வச்சுட்டா, முதல்வரின் பொன்னான நேரமும் மிச்சமாகும்... மக்களின் வரிப்பணமும் வீணாகாது... எல்லாத்துக்கும் மேலா, முதல்வரின் வருகைக்காக இரண்டு, மூன்று நாட்களா ராப்பகலா பாடுபடும் பல நுாறு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், அந்த உழைப்பை மக்கள் சேவைக்கு அர்ப்பணிக் க முடியும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll பத்திரிகை செய்தி: தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக் கோரி, டில்லியில் சமீபத்தில் நடந்த பேரணியில் பங்கேற்குமாறு த.வெ.க., அமைச்சர்களிடம் காங்., முன்னணி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி; மத்திய பா.ஜ., அரசுடன் இணக்கம் என்பதையே முதல்வர் விஜய் விரும்புகிறார். எனவே, டில்லி பேரணியை த.வெ.க., புறக்கணித்து விட்டது. இதனால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அ திருப்தி அடைந்துள்ளார். டவுட் தனபாலு: ராகுலின் குடும்பம் பரம்பரை பரம் பரையா அரசியல்ல இருக்கு... அதேநேரம், அரசியலுக்கு வந்த ரெண்டே வருஷத்துல, அதன் நெளிவு சுளிவுகளை விஜய் கத்துக்கிட்டாரே... அதனால, விஜயிடம் ராகுல் அரசியல் பாடம் படிக்கணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழக மக்களை, சினிமா கவர்ச்சி காட்டி ஏமாற்றி, ‘திராவிட ஆட்சிகளுக்கு மாற்று நாங்கள்’ என கூறி, ஆட்சிக்கு வந்துவிட்டு வீழ்ச்சியை நோக்கி தமிழகம் செல்லும் மாற்றத்தை கொடுத்து உள்ளனர். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நி லை மை கடந்த தி.மு.க., ஆட்சியை விட மோசமாக உள்ளது. டவுட் தனபாலு: சினிமா கவர்ச்சி பத்தி நீங்க பேசலாமா...? உங்களது குருநாதர்களான, அ.தி.மு.க.,வை து வங்கிய எம்.ஜி.ஆர்., அதன்பின் அந்த கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா எல்லாம் சினிமாவில் இருந்து வந்தவங்க என்பதை மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SRam
நவ 06, 2026 18:18

விஜய்க்கு அறிவோரையா ?


duruvasar
நவ 06, 2026 09:55

வாலு தம்பி , எம் ஜி ஆரும் , ஜெயலலிதாவும் சினிமா பாணியில் ஆட்சி நடத்தவும் இல்லை, தமிழகத்தையோ சரிவுக்கு கொண்டு செல்லவில்லை . இப்படி எதிர் கட்சி காரன் மாதிரி வாய்க்குவந்ததை ஒலரிடமோ என்ற டவுட்டு வருகிறதா ?


S.V.Srinivasan
நவ 06, 2026 08:09

மக்கள் வரி பணம் எவ்வளவு செலாவானால் முதலமைச்சருக்கு என்ன. அவருக்கு வேண்டியது விளம்பரம். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விட மக்கள் வரி பணத்தை செலவு செய்து தனி விமானம் மூலம் போய்ட்டு வந்தவரு. இதையெல்லாம் காதுல வாங்க மாட்டாரு.


Lakshminarasimhan
நவ 06, 2026 07:54

இந்த அறிவுரையை முதல்வர் விஜய் இடத்தில் தினமலர் தனிப்பட்ட முறையில் சொல்லுமா ?


gayathri
நவ 06, 2026 09:45

atheppadi?


சமீபத்திய செய்தி