உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: லோக்சபா தேர்தலில் யாருடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது தொடர்பாக, அ.ம.மு.க., தரப்பிலும் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. முழுமை அடைந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணியாக இருக்கலாம்; தனித்தும் இருக்கலாம். நானும், பன்னீர்செல்வமும் இணைந்து அரசியலில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். மற்றதை பொறுத்திருந்து பாருங்கள்.டவுட் தனபாலு: கூட்டணி சேர்வதை விட, நீங்க தனித்து போட்டியிடுவது தான் சால சிறந்ததாக இருக்கும்... அப்ப தான், 39 எம்.பி., தொகுதிகள்லயும் நீங்க ஜெயிச்ச பிறகு, அந்த வெற்றிக்கு மற்ற கட்சிகள் சொந்தம் கொண்டாடாம இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர, விரைவாக அனுமதி வழங்கும்படி, கவர்னர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.டவுட் தனபாலு: வலியுறுத்தாம எப்படி இருப்பார்... 'செந்தில் பாலாஜி, பொன்முடி மாதிரி இன்னும் பல அமைச்சர்கள் சிறைக்கு செல்வாங்க'ன்னு அடிக்கடி அவங்களை சீண்டிட்டே இருந்தா, உங்களுக்கும் ஜெயிலை திறந்து காட்ட தான் செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக முதல்வர் ஸ்டாலின்: சமூக நீதியை நிலை நிறுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம். தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறி, இந்தியாவின் தலைச்சிறந்த மாநிலமாக மாற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்படுகிறோம். அனைத்து மக்களின் அரசாக, தி.மு.க., அரசு போற்றப்பட்டு வருகிறது. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி; உங்கள் கவலைகளை போக்கும் ஆட்சி. தொல்லை இனி இல்லை; வானமே உங்கள் எல்லை.டவுட் தனபாலு: வேங்கைவயல் கிராமத்து குடிநீர் தொட்டியில, மனித கழிவை கலந்த சம்பவம் நடந்து, ஓராண்டு முடிந்தும், இன்னும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிச்சு தண்டிக்காம இருப்பது தான், சமூக நீதியை நிலைநாட்டிய அழகா என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !