உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது.டவுட் தனபாலு: இந்த மாதிரி புது புது திட்டங்களை அறிவிக்கிறது நல்லது தான்... அதே நேரம், அரசு மருத்துவமனைகளை தேடி வர்ற நோயாளிகளுக்கு நல்லபடியா சிகிச்சை அளித்து, அவங்களை குணப்படுத்தி அனுப்புறதுலயும் அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!பத்திரிகை செய்தி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி ஆஜரானார். ஏற்கனவே இவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.டவுட் தனபாலு: தமிழக காங்., தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என, கார்த்தி துடியா துடிக்கிறார்... இத்தனை வழக்குல சிக்கியவருக்கு பதவியை குடுத்தா, நாளைக்கு திஹார் ஜெயில்ல இருந்து தான், கட்சி பணியை கவனிப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!காங்., முன்னாள் தலைவர் சோனியா: இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர்; இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.டவுட் தனபாலு: எந்த மதத்துக்கும் சார்பாகவோ, எதிராகவோ செயல்படாமல் இருப்பது தான் உண்மையான மதச்சார்பின்மை... ஆனா, உங்க கூட்டணியில இருக்கிற தி.மு.க., தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது யார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜன 04, 2024 22:06

கார்த்திக் சிதம்பரத்துக்கு கட்சி தலைவர் பதவியும் திஹார் ஜெயில் தண்டனையும் ஒரு சேர வந்தால், சசிகலா முதல்வர் ஆசையில் மிதந்த போது ஏற்பட்ட கதி தான்.


Anantharaman Srinivasan
ஜன 04, 2024 22:00

அரசு டாக்டர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிநேரத்தில் இருப்பதில்லை. அதை மறைக்கத்தான் மக்களைத்தேடி மருத்துவம் தொழிற்சாலையை தேடி மருத்துவம் என்ற புதுதிட்டமோ..?? தொழிலாளர்களுக்குத்தான் ESI உள்ளதே..??


Ramesh Sargam
ஜன 04, 2024 09:05

திட்டத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாச்சு மினிஸ்டர் அவேகளே...??


D.Ambujavalli
ஜன 04, 2024 07:03

முதலில் உங்கள் கூட்டணி திமுக தலைவர் ஹிந்து பண்டிகை தீபாவளிக்கோ, ஆயுத பூஜைக்கோ வாழ்த்து சொல்கிறாரா? ரம்ஜான் என்றால் நோன்புக்கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் என்றுதானே பேதம் பார்க்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை