உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: அக். 15

‘டவுட்’ தனபாலு: அக். 15

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: த.வெ.க., அமைச்சரவையில் இணைகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை; யாருக்கும் துாது அனுப்பவும் இல்லை, பேரம் பேசவும் இல்லை; அது தானாக நடந்தது. வி.சி.க.,வின் கொள்கையே, பா.ஜ.,வும், பா.ம.க.,வும் இருக்கும் அணியில் இணைய மாட்டோம் என்பது தான். டவுட் தனபாலு: அரசியலில் தீண்டத்தகாத கட்சி என்று எது வுமே கிடையாது... சூழலுக்கு ஏற்ப, கொள்கைகளை தளர்த்திக்கிட்டா மட்டுமே வெற்றி பெற முடியும்... த.வெ.க., கூட்டணிக்குள்ள பா.ம.க., வந்து, நீங்க வெளியேறினா நஷ்டம் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் என்பதில், ‘டவுட்’டே இல்லை!  பத்திரிகை செய்தி: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க.,வின் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் சபா நாயகர் முன் எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்று கொண்டனர். இதில், த.வெ.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, காங்கிரஸ் – வி.சி.க., – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களோ, அந்த கட்சிகளின் தலைவர்களோ பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, த.வெ.க., தரப்பில் கூப்பிடவில்லை’ என, தெரிவித்தனர். டவுட் தனபாலு: அது சரி... ‘ரெண்டு எம்.எல்.ஏ.,க்களும் விஜய் என்ற தனிப்பட்ட நபரின் செல்வாக்கால ஜெயிச்சிருக்காங்க.. . இதுல, கூட்டணி கட்சிகளுக்கு என்ன வேலை’ன்னு, த.வெ.க., தரப்புல நினைச்சிட்டாங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!  தி.மு.க., தலைமை அறிக்கை: சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன், தன் திமிர் பேச்சுகளால், தமிழகத்தில் வலுவாக இருந்த பா.ஜ., எதிர்ப்பு கூட்டணியை சீர்குலைத்த, த.வெ.க., அடிமையான காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் வாய் துடுக்கை வெளிப்படுத்தி உள்ளார். தி.மு.க.,வின் தோல்விக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுடன், மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் காரணமாக அமைந்தன. டவுட் தனபாலு: இன்னொரு பக்கத்தையும் யோசிச்சு பார்த்தீங்களா... சட்டசபை தேர்தலுக்கு முன்னாடியே, த.வெ.க., கூட்டணி யில் காங்கிரஸ் ஐக்கியமாகியிருந்தால், த.வெ.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும்... தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக கூட வந்திருக்க முடியாது என்பது தான், ‘டவுட்’ இல்லாத உண்மை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
அக் 15, 2026 15:36

தேர்தல் முடிந்து 6 மாசம் ஆக போகுது. இன்னும் திமுக உண்மையான காரணத்தை அறிய முயற்சிகூட செய்யவில்லை என்ற டவுட்டு வரவில்லையா . அதுபோக பாமகவும் ஜோசப் விஜய் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் , , வன்னியரசும் அமைச்சராக தொடருவார் என்பதும் குருமாவின் கூப்பாட்டில் தெளிவாக தெரிகிறது என்ற டவுட்டு வரவில்லையா .


T Kumaresh
அக் 15, 2026 13:11

காங்கிரஸ் ஐக்கியமாகியிருந்தால், த.வெ.க. க்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்திருக்கும்.


sankar
அக் 15, 2026 09:28

உண்மை - காங்கிரசும், விசிக-வும் கூட்டணியில் இருந்து விலகாமல் பார்த்துக்கொண்டது மட்டும் இன்றி, அதிமுக வில் இருந்து ராஜ்யசபா பதவி ஆசை காட்டி தேமுதிக-வையும் சேர்த்து பார்த்தார்- மண்டகசாயம் - அப்படியும் கதை நடக்கவில்லை


கம்மிகள், உண்டி குலுக்கி புரம்
அக் 15, 2026 07:55

கேவலம் பிளாஸ்டிக் சேர் sofa வுக்கு ஆதரவாக பதவி சுகத்திற்காக எதையும் செய்யும் சலுகைகள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் இந்த குருமா கூட்டம்


SUBBU,MADURAI
அக் 15, 2026 02:20

தமிழகத்தில் இந்த திருமா என்ற தாழ்வானின் கட்டப் பஞ்சாயத்து கட்சி ஒன்றுதான் தீண்டத்தகாத கட்சி