உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., துணை தலைவர் கே.பி.ராமலிங்கம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பழனிசாமி தான். அவர் தான், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு எத்தனை 'சீட்' ஒதுக்குவது என்பதை முடிவு செய்வார். தி.மு.க., அரசை விரட்டி அடித்து, தமிழக முதல்வராக பழனிசாமியை ஆக்கியே தீருவோம்.டவுட் தனபாலு: உங்க கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி'ங்கிறாரு... தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒருபடி மேல போய், '2026ல் பா.ஜ., ஆட்சி'ன்னு அடிச்சு விடுறாரு... இதனால, புண்பட்டு போயிருக்கிற அ.தி.மு.க.,வினருக்கு நீங்க ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., பொருளாளர் சையது மன்சூர்: பா.ம.க.,வின் அஸ்திவாரம் நிறுவனர் ராமதாஸ் தான். கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில் நிறுவன தலைவருக்கு முழு உரிமை உண்டு. ராமதாஸ் எடுத்த தீர்மானங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் செல்லும். கட்சியின் சட்ட திட்டங்கள் அப்படித்தான் உள்ளன. - டவுட் தனபாலு: உங்க கட்சியில் பொருளாளரா இருந்த திலகபாமாவை நீக்கிட்டு, உங்களை அந்த பதவிக்கு ராமதாஸ் நியமிச்சிருக்காரு... ஆனா, திலகபாமா தான் பொருளாளர்னு அன்புமணி சொல்றாரு... பொருளாளர் பதவி உங்களிடம் வந்தாலும், கட்சி கஜானா சாவி யார்கிட்ட இருக்குது என்ற, 'டவுட்' வருதே!ம.தி.மு.க., நிர்வாகிகள்: ஈரோட்டில் வரும் 22ல் ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எத்தனை சீட்களை பெறுவது என்பது குறித்து, மா.கம்யூ., - வி.சி., கட்சிகளை போல், பொதுக்குழுவில் ம.தி.மு.க., தன் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ம.தி.மு.க.,வுக்கு சீட் ஒதுக்க கோருவோம். தற்போதே கோரிக்கை வைத்தால் தான், ராஜ்யசபா தேர்தல் போல ஏமாற்றம் ஏற்படாது.-டவுட் தனபாலு: தி.மு.க., வினர் மதுரையில் பொதுக்குழு நடத்தி, 'கெத்து' காட்டியதற்கு போட்டியாக, நீங்க ஈரோட்டில் பொதுக்குழுவை நடத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது... அதே நேரம், தி.மு.க., காட்டிய பிரமாண்டத்தில் பத்தில் ஒரு பங்கையாவது உங்க பொதுக் குழுவுல பார்க்க முடியுமா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAVINDRAN.G
ஜூன் 19, 2025 11:09

மதிமுக என்று ஒரு கட்சி ஒரு காலத்தில் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமா இருந்தது. வைகோ பிரிந்தபோது சரிபாதியாக மாசேக்கள் வைகோவுடன் இணைந்தனர். வைகோ உணர்ச்சி வசப்பட்டு தேர்தல் கூட்டணியில் முரண்பாடான செயல்களால் மனம் வெதும்பி மீண்டும் திமுக மற்றும் அதிமுக வுக்கே போய்விட்டனர். எனக்கு தெரிந்தவரையில் எல் கணேசன், மதுராந்தகம் ஆறுமுகம், திருச்சி மலர்மன்னன், கம்பம் செல்வேந்திரன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மு கண்ணப்பன், செஞ்சி ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத், ஈரோடு கணேசமூர்த்தி. இன்னும் பல சிறந்த செயல்வீரர்களை மதிமுக இழந்துவிட்டது. மிச்சம் இருப்பது மல்லை சத்யா மட்டும்தான் பழைய நபர். வைகோவும் துறைவைகோவும் கட்சியை தீமுகவிடம் அடகு வைத்துவிட்டனர். இதுக்கு பேசாம திமுகவிலையே கட்சியை இணைத்துவிடலாம். கலைஞர் சொன்னமாதிரி மதிமுக என்பதன் அர்த்தம் மறுபடியும் திமுக.


D.Ambujavalli
ஜூன் 17, 2025 18:39

மதிமுக என்ற கட்சியே ‘நீயும் நானுமடி எதிரும் புதிருமடி ‘ என்று தந்தை- மகன் மட்டுமே உள்ள காட்சியாகும் நிலை வந்துள்ளது, இதில் பொதுக் ‘கூட்டமாம்’


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை