உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தி.மு.க., உடன் மீண்டும் கரம் கோர்ப்பதில், எந்த மாற்றமும் இல்லை. வேறெந்த கட்சியுடனும் கூட்டணி சேர்வதற்கான அவசியமும் இல்லை. இதுகுறித்து ரகசியமாக பேசும் பழக்கமும் எங்களுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கற்பனையாக பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். பா.ம.க., வலுவான கட்சி; தற்போது அங்கு நிலவுவது உட்கட்சி பிரச்னை. தந்தை, மகன் கருத்து வேறுபாட்டால், இரு அணி போல தெரிகிறது. கூட்டணியில் பா.ம.க., இணையுமா என்பதை, தி.மு.க., தலைமையே முடிவெடுக்கும்.டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணி யில் பா.ம.க., இணையுமா, இணையாதா என்பதெல்லாம் உங்க கையில் தான் இருக்கு... தி.மு.க., தரும் சொற்ப சீட்களை வாங்கிட்டு கம்முன்னு இருந்துட்டா, பிரச்னையில்லை... கூடுதல் சீட்கள் கேட்டு நீங்க குடைச்சல் கொடுத்தால், உங்களுக்கு, 'அவுட்' கொடுத்துட்டு, பா.ம.க.,வை, 'இன்' பண்ணிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: தமிழகத்தில், 30 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ள கள்ளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இறக்கி, மக்களுக்கு வழங்குகிறார். கள் இறக்கும் விவசாயிகள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால், மரம் ஏறி கள் இறக்கிய சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... சாதாரண பனை ஏறும் தொழிலாளி கள் இறக்கினால், அவர் மீது வழக்கு பதிவு பண்ணி கைது பண்ணிடுறாங்க... ஆனா, 'டிவி'க்களில் நேரடி ஒளிபரப்புடன் கள் இறக்கிய சீமானை கண்டுக்காம இருப்பதில், ஆளுங் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல் ஒளிந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., செய்தி தொடர்பு குழு செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்: தி.மு.க., கூட்டணி கட்சிகள், அதிக தொகுதிகள் கேட்பது அவரவர் உரிமை. அதை தவறு என சொல்ல முடியாது. ஆனால் இருப்பது, 234 தொகுதிகள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதை, இருக்கும் தொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதற்கான உத்தியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: இதன் மூலமா, 'கடந்த 2021 தேர்தல் போலவே இம்முறையும், கூட்டணி கட்சிகள் எல்லாத்துக்கும் தலா ஆறு சீட்கள் கண்டிப்பாக ஒதுக்கப்படும்... அதுக்கு மேல எதிர்பார்க்காதீங்க' என்பதை சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Veeraputhiran Balasubramoniam
ஜூன் 25, 2025 19:09

பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்கக் கூடாது. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தம் கிடையாது" கூறியது சசிதரூர் அதை கேட்டு வைகோ வுக்கும் மோடிஜி யய் போலபறக்க ஆசை ..... ஆனால் கூட பறக்க 6 பேர் கூட இல்லத கட்சி ஆளுக்கு 2 சீட் 12 வேணுமாம் எதிலாவது ஒன்றில் அனவரும் ஜெயித்து 6 பேர் வந்து விட்டால் கட்சி அங்கீகாரம் கிடைக்குமாம்.... இருப்பதோ ஒரே துண்டும் அதுவும் தோளில் போட்டு இருக்கிறார். சிக்கல் தான் இடம்பிடிக்க. கூட ஒரு துண்டு தான் உள்ளது...


Bhaskaran
ஜூன் 25, 2025 14:58

கோபால் அடுத்து புது மில் வாங்க திட்டம் போடறார் இப்படி பேசினால் திமுக ஸ்வீட் பாக்ஸ் அதிகம் தரலாம்


D.Ambujavalli
ஜூன் 24, 2025 18:35

அடிமட்டத்தொண்டன்தான் உயிரைக் கொடுத்து கட்சிக்காக- பாடுபடுவான் அவன் குடும்பமும் முகவரியின்றித் தவிக்கும். தலைவரோ ‘இந்த மடம் விட்டால் சந்தை மடம்’ பெட்டியும், ஒன்றிரண்டு சீட்டும் தூக்கியெறியும் கட்சியில் ஒட்டிக் கொண்டு விடுவார். இனியாவது கட்சி ஆதரவு, அனுதாபம், வெறி என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குடும்பம், பிள்ளை குட்டிகளை முன்னேற்றப்பாருங்கள் மக்களே...


கண்ணன்
ஜூன் 24, 2025 12:23

வை கோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவே மாறிவிட்டார். வடிவேலு பாடு திண்டாட்டம்தான்


srinivasan
ஜூன் 24, 2025 06:21

வைகோ அவர்களுக்கு வயதாகிவிட்டது. அதனால் மறதியும் அதிகம். நாம் எதற்காக மதிமுக தொடங்கினோம் . எவ்வளவு உயிர்களை காவு கொடுத்து கட்சி துவங்கியது என்பதை மறந்து மீண்டும் திமுக அடிமை ஆகிவிட்டார் . இறந்தவர்கள் ஆன்மா இவரை மன்னிக்குமா?


Thravisham
ஜூன் 24, 2025 14:31

வாரிசு ஊழல் கட்சி பிணத்தை வைத்து அரசியல் செய்துதான் ஆட்சியை பிடித்தது. சைக்கோவும் அவ்வளவே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை