உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசுவது முதல்வர் விஜய்க்கு முறையல்ல. இப்படித்தான் ஒரு காலத்தில், 'எங்களை விட்டால் ஆளே இல்லை' என, காங்கிரஸ் சொன்னது. அந்த கட்சி தோற்காமலா போய் விட்டது? சொந்த பலம் இல்லாமல், ஊரான் பலத்தில் இருக்கிறவருக்கு இவ்வளவு தர்பார் தேவையில்லை. டவுட் தனபாலு: காங்கிரஸ் அப்படி சொல்லி, 50 வருஷங்களுக்கு மேல இருக்கும்... ஏன் உங்க தலைவர் ஸ்டாலினே, '2026 தேர்தலில் வென்று, 2031 தேர்தலிலும் ஜெயிப்பேன்'னு பிரசாரத்தில் ஜம்பமா பேசி, கடைசியில அவரே கொளத்துார்ல தோற்று போகலையா...? அதை உதாரணம் காட்டாதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே! ---- அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கரூரில் முதல்வர் விஜய், வழக்கம்போல வசனகர்த்தா கொடுத்த, 'ஸ்கிரிப்ட்' படி முழங்கி தள்ளியுள்ளார். தன் தவறை உணராமல், காவல் துறை மீது பழி போடுவது, 'பஞ்ச் டயலாக்' அடிப்பது, 'தில் இருக்கா, திராணி இருக்கா' என, அநாகரிக பேச்சை வெளிப்படுத்தி உள்ளார். தீர்ந்து போன சக்தியில் இருந்து, குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வரே, உங்கள் கட்சியினர் செய்யும் முறைகேடுகள், தினமும் செய்திகளில் வருவதை முதலில் கவனியுங்கள். டவுட் தனபாலு: தினமும் நாலு முறை பேட்டி தந்துட்டு இருந்த இவரை, கொஞ்ச நாட்களா காணவே இல்லையே... அ.தி.மு.க.,வில் நீடிப்பதா, வேண்டாமான்னு இத்தனை நாட்களா ரூம் போட்டு யோசனை பண்ணிட்டு, அ.தி.மு.க.,விலேயே நீடிக்கும் முடிவை எடுத்துட்டு, த.வெ.க.,வை விமர்சிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது! ---- பா.ம.க., தலைவர் அன்புமணி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த, 31 பேருக்கு முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியுள்ளார்; இது வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு, 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, 1987ல் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும், 25 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. அவர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். டவுட் தனபாலு: அடுத்து, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவங்களின் வாரிசுகளுக்கும் தி.மு.க.,வினர் அரசு வேலை கேட்பாங்களே... அது இருக்கட்டும்... உங்க கட்சி வளர்ச்சிக்கு காரணமான, அந்த 25 பேரின் குடும்பங்களுக்கு நீங்க இத்தனை வருஷங்களா எதுவுமே செய்யாதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
ஜூலை 14, 2026 16:49

கூட்டணி வண்டியில் சவாரி செய்து 55 வருடம் ஆட்சியை சுற்றி வந்து கொழுத்த துரைக்கு பிபி ஏறுவது இயற்கையானதுதான். வெள்ள பாதிப்புவந்தால் ஏக்கருக்கு 2 லட்சம் இழப்பீடு என்று கேட்டு பழகிய ராமதாஸின் மகன் எப்படி மாற்றி யோசிப்பார் என்ற டவுட்டு வரவில்லையா


oviya vijay
ஜூலை 14, 2026 16:33

ஒரு வீல் சேர் பார்சல்


sankaranarayanan
ஜூலை 14, 2026 08:52

துரைமுருகன் அவர்களே ஒன்றை பொறுமையாக விவரமாக தெரிந்துகொள்ளுங்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாருமே சொல்லவில்லை செய்யவும் இல்லை "தவளை தனது வாயால் கெடும்" என்பார்கள் அதுபோன்று உங்களுக்கு இப்போது அந்த வார்த்தைகள் பொருந்தும் மக்கள் தேர்தல் வந்தபோது ஆட்சியை நிலைக்க வைக்க அவர்கள் எடுத்த வாக்கு சீட்டினால் அவரவர்கள் எடுத்த முடிவே தவிர முதல்வர் விஜய் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவே இல்லை மக்கள் உங்களை தூர விரட்டிவிட்டார்கள் இனி உங்களது ஆட்சியை குப்பத்தில் போட்டுவிட்டார்கள் இனி ஜன்மா ஜமாத்திருக்கும் நிமிராவே முடியாது உங்கள் நாமதேயமே இனி இருக்காது அழிக்கப்பட்டுவிடும் இப்படி இருக்கையில் நடப்பு தெரியால் நீங்கள் கோபாலபுரத்து விசுவாசியாகவே இன்னுமா இருக்கிரிர்கள் அந்தகோ பரிதாபம் என்னவென்று உங்களை சொல்வது எப்படி சொல்வது


Kannan
ஜூலை 14, 2026 08:03

விஜய்க்கு ஓவர் ஜால்ரா. இது நல்லதுக்கு இல்லை


xxxx
ஜூலை 14, 2026 04:40

அவரே திறந்துபோன சக்தின்னு ஒதுக்கறாரா .,ha


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை