உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'இது பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணு தான்' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது குறித்து, என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்றதே கிடையாதுங்க.டவுட் தனபாலு: சீமானை விட, அரசியல்ல நீங்க ரொம்பவே ஜூனியர்தான்... உங்க கட்சியின் சீனியர் அமைச்சர்களே, அவருக்கு பதிலடி தந்துட்டு இருக்கிற சூழல்ல, 'சீமானுக்கு பதில் தர முடியாது'ன்னு சொல்லி, 'அமைச்சர்களைவிட நான் உயர்ந்தவன்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!பா.ஜ., - எம்.பி.,யான நடிகை ஹேமமாலினி: நான் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடினேன். சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் கும்பமேளாவில் நீராட வருகின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கு நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் பெரிய விபத்தில்லை. அதை பலரும் ஊதிப் பெரிதாக்குகின்றனர்.டவுட் தனபாலு: கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் பலியானது உங்களுக்கு பெரிய விஷயமில்லையா... சாதாரண பக்தர்கள் வரிசையில் நின்று புனித நீராடியிருந்தால், அவங்க சிரமங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்... வி.ஐ.பி.,யான நீங்க, சிறப்பு வழியில் நீராடிட்டு, 'ஏற்பாடுகள் சூப்பர்'னு பெருமை அடிப்பது சரியா என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார், வைகைசெல்வன் பங்கேற்றனர். இதில், 'வரும் 16ம் தேதி வேலுாரில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநாடு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுச்சாவடி வாரியாக பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டவுட் தனபாலு: ஜெ., துவங்கிய இளைஞர்கள், இளம்பெண் பாசறைக்கு அவங்க காலத்துல அதீத முக்கியத்துவம் கொடுத்தாங்க... ஆனா, அவருக்குப் பின் வந்தவங்க, பாசறை பக்கம் எட்டிக்கூட பார்க்கலை... அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வருது என்றதும், பாசறையை துாசு தட்டி எடுக்குறாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ambika. K
பிப் 07, 2025 10:52

ஈர வெங்காயம் இராமசாமி அழுகிய வெங்காயம் அண்ணா கெட்ட வெங்காயம் கலைஞன் விட்டு வேற எதை பத்தி வேணும் என்றாலும் கேளுங்க பதில் கிடைக்கும்


D.Ambujavalli
பிப் 07, 2025 10:27

நான் எதையாவது உளறி, அது பிரச்சனையாகி விடுகிறதே என்றுதான் சீனியர்கள் நாசூக்காக என்னைப் பேச விடுவதில்லை இதுதான் rakasiyam


Dharmavaan
பிப் 07, 2025 07:02

கும்பமேளா உயிரிழப்பு வெளிநாட்டு உள் நாட்டு எதிரிகளின் சதி திட்டம் .ஜிகாதி/பாவாடை பங்கும் இருக்கும் இவ்வளவு கோடியில் இது நடப்பது அரிதானதல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை