உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அரியவகை நோய் பாதித்த சிறுவன்: முதல்வரின் உதவி கோரும் பெற்றோர்

அரியவகை நோய் பாதித்த சிறுவன்: முதல்வரின் உதவி கோரும் பெற்றோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், முதல்வரிடம் உதவி கேட்டு மனு அளித்தனர். திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் - பிரியங்கா தம்பதியர், அரியவகை நோய் பாதித்த தனது மகனை காப்பாற்ற வேண்டுகோள் விடுத்து, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று மனு அளித்தனர்.சிறுவனின் தந்தை ரமேஷ் கூறியதாவது: எங்கள் நான்கு வயது மகன் பிரஜித், கடந்த ஒன்றரை ஆண்டாக, அப்லஸ்டிக் அனீமியா எனப்படும் எலும்பு மஜ்ஜை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனின் உயிரை காப்பாற்ற, ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது. இதற்கு 16 முதல் 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. சிறு வியாபாரியான என்னால், அவ்வளவு தொகையை செலவிட இயலாது. தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு மருத்துவ செலவினங்களை ஏற்று, எங்கள் மகனின் உயிரை மீட்டுக்கொடுக்கவேண்டும்.இது குறித்து, மகனின் மருத்துவ அறிக்கையுடன் கூடிய மனுவை, கலெக்டர் மூலம், முதல்வருக்கு அனுப்பியுள்ளோம். ஏழை பெற்றோராகிய எங்கள் மீதும், உயிருக்கு போராடும் குழந்தையின் மீதும் முதல்வர் கரிசனம் காட்டவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 26, 2024 22:34

என்னது ? பத்து லட்சமா ? அதெல்லாம் நாங்க இடம் பொருள் ஏவல் சாதி மதம் பார்த்துதான் கொடுப்போம் ...


Visu
ஜூலை 26, 2024 19:16

கள்ளசாராய மரணத்திற்கே 10 லட்சம் குடுக்கும் அரசு இது வாழ்வதற்கு நிச்சியம் நிதி வரும் ஆனா வராது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ