உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கடவுள்களுக்கு தண்டனை தரும் விசித்திரமான அம்மன் கோவில்

கடவுள்களுக்கு தண்டனை தரும் விசித்திரமான அம்மன் கோவில்

பஸ்தார்:பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கித் தரும் நீதிமன்றமாக சத்தீஸ்கரில் உள்ள பங்காரம் அம்மன் கோவில் செயல்படுகிறது.சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் பழங்குடியினர் 70 சதவீதம் உள்ளனர். கோண்டு, பத்ரா, ஹல்பா, துர்வா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் விசித்திரமானது. இங்குள்ள பங்காரம் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மூன்று நாள் திருவிழாவின் போது, அப்பகுதியில் உள்ள சிறு தெய்வங்கள் மீது பொதுமக்கள் குற்றம் சுமத்தும் நிகழ்வு நடக்கிறது.அதாவது, விவசாயம் பொய்த்து போனது, நோய்கள் குணமாகாதது உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றாத தெய்வங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பங்காரம்மன் முன்னிலையில் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.கடவுளின் நீதிமன்றத்தில் கிராம தலைவர்கள் வழக்கறிஞர்களாக செயல்படுகின்றனர். விலங்குகளும், பறவைகளும் சாட்சிகளாக கருதப்படுகின்றன. பங்கார அம்மனின் அறிவுறுத்தல்களுக்கு குரல் கொடுப்பதாக நம்பப்படும் கிராமத் தலைவரால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குற்றங்கள் நிரூபிக்கப்படும் தெய்வங்களை கோவில்களில் இருந்து வெளியேற்றுவது, ஓராண்டுக்கு கோவிலின் பின்புறம் உள்ள மரத்தின் கீழ் வசிக்க வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தண்டனை காலம் முடிந்த பின் அந்த கடவுள் விக்கிரகங்கள் மீண்டும் கோவில்களுக்குள் எடுத்து வரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ