உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் உள்ள சோலை நகர் குடியிருப்பில் வசிப்பவர் முருகமணி, 39, பனியன் ஆடை ஏற்றுமதி நிறுவன டெய்லர். இவருக்கு இரட்டையர்களான சபரிஸ்ரீ, ஹரிணி என இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் இருவரும், 484 என ஒரே மதிப்பெண் பெற்று, பள்ளி இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.இரட்டையர் சபரிஸ்ரீ, ஹரிணி ஆகியோர் கூறுகையில், 'எங்கள் தந்தை முத்துக்குமரன், 10 ஆண்டுகள் முன்பு இறந்தார். இருவரையும் படிக்க வைப்பதற்கு எங்கள் தாய் சிரமப்பட்டார். தாயின் கஷ்டங்களை உணர்ந்து, இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினோம்.'அதனால், அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் மதிப்பெண்கள் எடுத்துள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்தனர்' என்றனர்.சாதித்த இரட்டை சகோதரிகளை, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை புனிதவதி, பள்ளி வளர்ச்சிக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்பினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subramanian
மே 12, 2024 07:06

வாழ்த்துகள்


Sureshkumar
மே 11, 2024 10:32

மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்


Sureshkumar
மே 11, 2024 10:32

மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்


NicoleThomson
மே 11, 2024 10:21

வாழ்த்துக்கள் பெண்களே


S. Gopalakrishnan
மே 11, 2024 10:17

நீடூழி வாழ்க !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை