மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
போட்டியாளர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து, தங்களின் காய்களை நகர்த்திக்கொண்டு இருக்க, வீல் சேரில் அமர்ந்தபடி, 'செக்' வைக்கிறார் கோவை இளைஞர். செஸ் விளையாட்டில் தனக்கு இருந்த ஆர்வத்தால், தனது ஆறு வயதிலேயே செஸ் பயிற்சி பெற ஆரம்பித்தார், விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த, 22 வயது இளைஞர் சங்கர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் தனது திறமையை மெருகேற்றுக்கொண்டிருந்தார். அப்போதுதான், யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.தனது அண்ணனுடன் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டபோது ஏற்பட்ட சிறு விபத்தில், எதிர்பாராத விதமாக அவரின் பள்ளி பேக், 'காலர் போன்' பகுதியில் இடிக்க, முதுகுதண்டில் அடிபட்டது. இதனால், நடக்க முடியாமல் போனது. பள்ளி படிப்பை முடித்த சங்கர், தொலைதுார கல்வியில் சேர்ந்தார். இதனால் தனக்கு மிகவும் பிடித்த செஸ் விளையாட்டை, பாதியில் விடும் நிலை ஏற்பட்டது. ஆனால், செஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், சங்கரின் மனதில் தீயாய் எரிந்தது. தற்போது, ஒரு வருடத்திற்கு முன், மீண்டும் செஸ் விளையாட துவங்கினார்.தனது ஆரம்ப கால பயிற்சியாளர் தனசேகர், கிரிமன் ஆகியோரின் துணையுடன், பயிற்சி பெற்று, கோவையில் நடந்த தமிழக ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்று, 62வது இடத்தில் முடித்தார். தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட அவர், சமீபத்தில் நடந்த அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான, செஸ் போட்டியில் பங்கேற்றார். இம்முறை, அகில இந்திய அளவில் 6வது இடமும், வீல் சேர் பிரிவில் இரண்டாமிடமும் பிடித்து, தனது வருகையை பதிவு செய்தார்.''நீண்ட நாட்களுக்குப் பின், செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினேன். தொடர்ந்து பயிற்சி பெற்று, பல்வேறு மேடைகளில் வெற்றி பெற்று சாதிக்க விரும்புகிறேன்,'' என்றார் சங்கர்.ஆல் தி பெஸ்ட் சங்கர்!
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1